நிரந்தர சுகம் எது
நவம்பர் 24,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* உலக வாழ்வில் சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியில் இருந்து வருகிற சுகத்தை நம்மால் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது.
* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தில் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.
* கிணற்று ஜலத்திற்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. அதேமாதிரி நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கி விட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கு காரணமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால்,
ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி பரம லேசாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement