சத்தமாய் பேசுபவருக்குரிய பதில்
செப்டம்பர் 14,2008,
17:47  IST
எழுத்தின் அளவு:

* வலிமை, ஆனந்தம் போன்ற குணங்களின் பிறப்பிடமாக அமைதி உள்ளது. அத்தகைய அமைதி ஒவ்வொருவரின் உள்மனதிலும் உள்ளது. எனவே, அதனை வேறு எங்கேயோ இருப்பதாக எண்ணி வெளியில் தேட வேண்டாம். தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுள்ள மனம், அமைதியின் வடிவமாக இருக்கும். அமைதியாக இருப்பவர்கள் எந்த செயலையும் சிறப்பாகவும், குறையில்லாமலும் செய்பவர்களாகவுமே இருப்பார்கள். எனவே, மனதில் இருக்கும் அமைதியை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.* மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.* எந்த செயலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கூட இறைவனின் கருணையால்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தியானம் செய்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன், அர்ப்பணிப்பிலும் கிடைக்கும். ஏனெனில் அர்ப்பணிப்பும் ஒரு தியானம்தான்.

 

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement