தெய்வம் நமக்கு துணை
டிசம்பர் 01,2011,
14:12  IST
எழுத்தின் அளவு:

* குழந்தைப்பருவம் பொய் சொல்லாமலும், பிறரைப் பழித்துப் பேசாமலும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* மனிதனுக்கு மனிதன் விரோதம் கொள்ளாமல் அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
* தெய்வம் உனக்கு என்றும் துணையாக நிற்கும். தெய்வஅருள் இருந்தால் எந்த தீங்கும் மனிதனை அணுகுவதில்லை.
* மனிதன் அனைத்து துன்பங்களின்றும் விடுபட்டு, மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான், அதற்கான வழிகளை கீதை காண்பிக்கிறது.
* கடவுளிடமும் அவனுடைய படைப்பாகிய அனைத்து ஜீவராசிகளிடமும் தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி.
* இறைவணக்க பாடல்களால் மகிழ்ச்சி ஏற்படுவதுடன் லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. மன அமைதியும் ஏற்படுகிறது.
* மனதை தீய நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நல்லவழியில் செலுத்துவதற்கான நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement