விழித்திருந்தால் வெற்றி பெறுவாய்
டிசம்பர் 01,2011,
14:12  IST
எழுத்தின் அளவு:

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போது செய்.
* உன் கடவுளாகிய ஆண்டவர், உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* தூங்கி கொண்டேயிருப்பதை நாடாதே, கண் விழித்திரு. உனக்கு வயிறாற உணவு கிடைக்கும்.
* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல், கடவுளின் பணியாளராய், கடவுளின் திருவுள்ளத்தை (அவரது விருப்பத்தை) உளமாற நிறைவேற்றுங்கள்.
* ஒருவர் தம்மை தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாக இருப்பார்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement