பக்குவம் பெற்றால் துன்பமில்லை
செப்டம்பர் 19,2008,
10:34  IST
எழுத்தின் அளவு:

மக்களில் பலர் புகழ் வேண்டியோ அல்லது புண்ணியம் பெற வேண்டியோ தர்மம் செய்கின்றனர். அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பரோபகாரம் செய்பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறைவனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் இடமுண்டு. அதனால், நம்முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப்பானவை என்று எண்ணம் கொள்வது கூடாது. பிறருக்குப் போதிப்பது சுலபமல்ல. ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement