உணவு மண்ணில் வளர்வது எதற்காக?
செப்டம்பர் 20,2008,
18:41  IST
எழுத்தின் அளவு:

* மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம். சிந்திக்கும் ஆற்றலுடையவர்கள், அளப்பரிய சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. சூநான் யார்' என்று சிந்திக்கும்போதே, அவர்களுக்கு உலகம் பற்றிய அனைத்து உண்மைகளும் விளங்கிவிடுகிறது. அனைத்தும் சொந்தமாகி விடுகிறது.

* நீங்கள் இறைவனின் பாதத்தை சேரவேண்டும் என விரும்பினால், அதிக புண்ணியம் செய்யுங்கள். அதன் பலனை முழுமனதுடன் தியாகம் செய்து விடுங்கள். அவ்வாறு செய்பவர்கள் புண்ணியத்தின் பலனால் இறைவனை சென்றடைவதைவிட, இன்னும் விரைவாக அவரிடம் சேர்ந்து விடுவர். அவர்களுக்கு நிரந்தரமான மனஅமைதியும், பேரின்பமும் கிடைத்துவிடும்.* ஒவ்வொருவருக்கும் தியாக மனப்பான்மை வேண்டும். ஒருவர் பாவமற்றவராகவும், சுத்தமான ஆத்மாவை உடையவராகவும் இருக்க விரும்பினால் சுயநலத்தை அறவே ஒதுக்கி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, முழுமையாக கடவுளிடம் சரணடைந்துவிட வேண்டும்.* மனிதர்கள் உயிர் வாழ உணவு அவசியம். உணவில்லாதவன், உயிரில்லாதவன் ஆகிறான். அத்தகைய உணவு மண்ணில் இருந்துதான் வருகிறது. மண்ணை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த உடலும் மண்ணின் தன்மையுடன்தான் இருக்கிறது. இறுதியில் அதே உடல் மண்ணிற்குத்தான் செல்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் தியாக மனதுடன் புண்ணியச்செயல்களை செய்யுங்கள்.

Advertisement
சாந்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement