ஆனந்த தீபம் ஏற்றுவோம்
டிசம்பர் 05,2011,
09:12  IST
எழுத்தின் அளவு:

* தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குவது சிறப்பு.
* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜூவாலை மேல்நோக்கி எழுவது போல் உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த, யாராலும் முடியாது.
* வியாதி தீர பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல் தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* ஒளி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு சொர்க்கமும், இருள் மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகமும் கிடைக்கிறது. ஒளிக்காக திருக்கார்த்திகையில் விளக்கேற்றப்படுகிறது.
* நான் என்ற எண்ணம் விலகினால் துன்பம் முழுவதும் நீங்கப் பெற்று அருட்பெருஞ் ஜோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உதிக்கும், என்றும் அழியா இன்பம் தோன்றும்.
* இறைவனுடைய கருணையைப் பெற நினைப்பவர்கள் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
- வாரியார்
(இன்று கார்த்திகை தீபம்)

Advertisement
கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement