நாடும் உலகமும் நன்மை பெறட்டும்
டிசம்பர் 03,2007,
19:07  IST
எழுத்தின் அளவு:

பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தூய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம். சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம். சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை. ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே. இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.


ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது. ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால், நல்ல விளைவுகள் ஏற்படும். அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும். இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.


நான் உங்களை வேறொன்றும் கேட்கவில்லை. பிரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும். வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு கவலை என்பதே கிடையாது. துயரமும் இல்லை. எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன். எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரும்போது கொண்டுவரவில்லை. போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை. பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன், தளராத நம்பிக்கையுடன், வேறுபாட்டு உணர்வை நீக்கி, எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள். உங்கள் வாழ்க்கை புனிதமாகும். நாடும் உலகமும் நன்மை பெறும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement