மனசுத்தம் உள்ளவரின் நண்பன்
டிசம்பர் 11,2011,
09:12  IST
எழுத்தின் அளவு:

* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.
* கடவுள் நமக்கு பயம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* மனசுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த நாட்டை ஆள்பவன் கூட நண்பனாகத் தான் இருப்பான். அவனுடைய உதட்டு அசைவை அனைவருமே விரும்புவர்.
* அவர் (கர்த்தர்) தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
* நீ ஒருவனிடம் எதையாவது அநியாயமாக வாங்கினால் நான்கு மடங்காக திரும்ப செலுத்த வேண்டி வரும்.
* பெற்றோர்களே! பாவச் செயல்களுக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த வேண்டாம், உட்படுத்தினால் ஒரு நாள் நாமும் கதற நேரிடும்.
* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
-பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement