உனக்குள் இருக்கும் இறைவன்
டிசம்பர் 11,2011,
09:12  IST
எழுத்தின் அளவு:

* பிறர் அறியும் வண்ணம் தொண்டு செய்யக் கூடாது, அடக்கமாக இருங்கள். பிறருக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
* வாழ்க்கை ஒரே திசையில் மட்டும் செல்லும் நீரோட்டம் என்பதால், அதைப் பயனுள்ள வகையில், குறிப்பாக பக்தி வழியில் செலவழிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
* மனித இதயத்தில் கோபத்தீ, காமத்தீ, பாசத்தீ, ஆசைத்தீ இப்படி பலவிதமான நெருப்புகள் கனன்று கொண்டிருக்கின்றன. அவற்றை வளர விடக்கூடாது.
* தூய்மையற்ற சிந்தனைகள் படிந்தால், அசுத்தமான எண்ணங்கள் மனக்கண்ணாடியில் வழியே இதயத்திரையில் படிந்து விடும். எனவே நல்ல திசையில் மனதைத் திருப்ப வேண்டும்.
* படத்தை கடவுளாக வணங்கலாம். கடவுளைப் படமாக கருதக்கூடாது. கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். ஆனால், கடவுளைக் கல்லாக, காகித துண்டாக கீழ் நிலைக்கு இறக்கக் கூடாது.
* நீ தெய்வத்துடன் கலந்து இருக்கிறாய். கடவுளும் நீயும் ஒன்று தான். உன்னுள்ளே கடவுள் இருக்கிறார் என்பது தான் சத்தியம்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement