கவசமாய் நிற்கும் வேல்
டிசம்பர் 11,2011,
09:12  IST
எழுத்தின் அளவு:

* முருகப்பெருமானை நினைப்பவர்களுக்கு, நல்லறிவு உண்டாகும். அறவழியில் செல்வம் சேரும். தீமைகள் அறவே விலகிச் செல்லும்.
* கடல் போல கவலை தோன்றும் போது, குமரப்பெருமானின் கையிலிருக்கும் வேலை நினைத்தால் போதும், அது கவசமாய் நின்று பாதுகாக்கும்.
* சக்திதேவி மீது ஏற்படும் பக்தியால் நன்மைகள் உண்டு. தினமும் உழைக்கும் நேரத்தில் எல்லாம் சக்திதேவி நம்மோடு இருப்பதாக எண்ண வேண்டும்.
* வாழ்க்கை கடலைக் கடக்க, சக்திதேவி ஒரு தோணியாக துணை வருவாள். அந்த தோணியில் பயணம் செய்து பிறவிக்கடலை கடக்கலாம்.
* மனத்தெளிவுடன் செய்யும் செயல்கள் அனைத்தையும் பக்தியுடன் செய்யுங்கள். அது மேன்மையை ஏற்படுத்தும்.
* இறைநாமத்தை கூறியவர்களுக்கு நன்மையே விளைந்திடும். நிலையில்லாத இன்பங்கள் மீதான ஆசை நீங்கி, உண்மையான இன்பம் ஏற்படும்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement