கஷ்டத்திற்கு ஒரே முடிவு
செப்டம்பர் 24,2008,
09:42  IST
எழுத்தின் அளவு:

எமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை. ஒவ்வொரு வினாடியும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மை பிடித்துக் கொள்வானோ தெரியாது. அதனால், அவன் வருவதற்குள் கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நமக்குப் பயமில்லை. கோபம் கொண்டவனோடு பழகினால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. தீயவனோடு பழகினால் நாமும் கெட்ட எண்ணம் கொண்டவனாக மாறி விடுகிறோம். யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய குணங்கள் நம்முள் உண்டாகி விடுகின்றன. அதனால் நல்லவர்களுடன் மட்டும் பழக்கம் கொள்வது அவசியமானதாகும். நமக்கு உண்டாகும் கஷ்டங்களைக் கண்டவர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேட்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களோ என்று சிந்தித்து மேலும் கஷ்டப்படாதீர்கள். கஷ்டத்தை பிறரிடம் சொல்வது என்று முடிவெடுத்தால், அதை கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் வழி பிறக்கும். மனிதன் மிருக நிலையில் இருக்கிறான். முதலில் மிருக நிலையிலிருந்து மனிதனாக மாற வேண்டும். தர்மம், ஒழுக்கம், பக்தி முதலியவற்றை பின்பற்றினால் மட்டுமே மனிதனாக மாறமுடியும். பின்னரே மனிதன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்த முடியும்.

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement