ஆத்மார்த்தமாக பணி செய்வோம்
செப்டம்பர் 24,2008,
17:08  IST
எழுத்தின் அளவு:

* ஒருவர் ஒரு பணியை செய்யும்போது, கை மட்டும் குறிப்பிட்ட பணியை செய்து கொண்டிருக்கும். மனம், வீட்டைப் பற்றியோ அல்லது குடும்பத்தை பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும். இவ்வாறு பணி செய்தல் கூடாது. உங்களுக்கு ஒரு பணி கொடுக்கப் பட்டால், அதனை முழுமனதுடன் ஏற்றுச் செய்யுங்கள். செய்வதற்கு விருப்பம் இல்லாமலோ அல்லது சரியான கவனம் செலுத்தாமலோ செய்வதால் எந்த பலனும் உண்டாகாது. மனமும் புத்தியும் ஆத்மார்த்தமாக ஒரு பணியை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்தான் வெற்றியும், முன்னேற்றமும் காண முடியும்.* உங்களிடம் ஒருவர் ஒரு உதவி கேட்டால், அதனை செய்வதோடு நின்று விடாமல், அவர் உதவி கேட்டதற்கான மூலாதாரத்தை அறிந்து அதனையும் நிறைவேற்றுங்கள். ஒரு வழிப்போக்கன் உங்களிடம் வந்து களைப்பை போக்க தண்ணீர் கேட்டால், வெளியிலேயே நிற்க வைத்து, தண்ணீரை மட்டும் கொடுத்து அனுப்பி விடாதீர்கள். அவனை அன்போடு வீட்டிற்குள் அழைத்து சிற்றுண்டி படைத்து, களைப்பு நீங்கும் வரையில் உபசரியுங்கள். இத்தகைய சேவை செய்பவர்கள் கடவுளின் அவதாரமாக திகழ்கிறார்கள்.* உங்கள் பேச்சு இனிமையாகவும், கேட்பவர்கள் மகிழும்படியாகவும் இருக்க வேண்டும். பாகுபாடு பார்க்காமல் மரியாதை, உபசாரம் மற்றும் உதவி செய்யும் வகையிலான வார்த்தைகளே வெளிவர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தையை பேசிவிடாதீர்கள்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement