உழைப்பதில் தான் சுகம்
செப்டம்பர் 28,2008,
18:49  IST
எழுத்தின் அளவு:

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு சமமானது. உடலினை உறுதி செய்வதோடு உள்ளத்தையும் உறுதியாக வைத்திருப்பது அவசியமானதாகும். உழைப்பதில் தான் சுகம் இருக்கிறது. நம்மில் ஒருவன் சம்பாதித்தால் ஒன்பது பேர் உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டதும் ஓடி விடும். தகப்பன், பாட்டன் சம்பாதித்த பொருளில் தாராளமாய் செலவு செய்வதில் மனிதனுக்குப் பெருமையில்லை. தானே தேடி தானே செலவழிப்பவனே உத்தமன் ஆவான்.பழிக்குப் பழி வாங்கிட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை தருகின்ற அதிகாரம் மனிதனுக்கு கிடையாது. பொதுவாக தான் செய்த குற்றத்தை மறந்து விடுவதும், மற்றவர்களின் குற்றத்தை பெரிதுபடுத்துவதும் மனிதர்களின் இயல்பாக உள்ளது.உடலை வெற்றி கொள்ளுங்கள். நீங்கள் கட்டளை இட்டபடி உடல் நடக்க வேண்டுமே ஒழிய, உடல் சொன்னபடி நீங்கள் நடக்க இடம் தரக்கூடாது. ஏனென்றால் நீங்கள் தேவர்களுக்குச் சமமானவர்கள்.
அறிவே செல்வங்களில் எல்லாம் தலையான செல்வமாகும். அறிவு தான் ஆணிவேர். அறிவிருந்தால் உலகத்தில் எதையும் சாதிக்கலாம்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement