வெற்றி தரும் பக்தி
டிசம்பர் 20,2011,
09:12  IST
எழுத்தின் அளவு:

* மனத்தெளிவுடன் செய்யும் செயல்கள் அனைத்தும் பக்தியை வளர்க்கும். இறைநாமத்தை சொல்பவர்களுக்கு நன்மையே கிடைக்கும்.
* பக்தியுடன் வாழ்ந்தால் நல்லபுத்தி, நவநிதி குறைவில்லாத செல்வ வாழ்க்கை உண்டாகும். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் வெற்றி கிடைக்கும். பயம் அறவே நீங்கிவிடும்.
* தினமும் உழைக்கும் போதும், பிற பணிகளைச் செய்யும் போதும், கடவுள் நம்மோடு இருந்து நம்மையும், நம் தொழிலையும், பணியையும் காப்பதாக எண்ண வேண்டும்.
* முருகப்பெருமானை நினைப்பவர்களுக்கு நல்லறிவைப் பயன்படுத்தி அறவழியில் சேர்த்த செல்வம் சேரும். அவர்களுடைய வாழ்வை முருகனின் வேல் கவசமாய் நின்று பாதுகாக்கும்.
* இறைவன் உலகிலுள்ள ரகசியங்களை அறியும் உணர்வை அளித்ததுடன் அதற்கு பக்தி என்ற சாதனத்தையும் தந்து நமக்கு நல்வழிகாட்டியுள்ளார்.
* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், நீயும், நானும், நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களும் தான் தெய்வம் என வேதம் சொல்கிறது. இதைதவிர வேறு தெய்வமில்லை.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement