மனிதனுக்கு பொறுப்பு வேண்டும்
டிசம்பர் 23,2011,
08:12  IST
எழுத்தின் அளவு:

* தெய்வத்தின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள் தான்.
* "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பர். குழந்தையே தெய்வமாக வந்துவிட்டது பிள்ளையாராக. அதனால் அவரைக் குழந்தை சுவாமியாக கொண்டாடுகிறோம்.
* இறைவனே அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணுதல் கூடாது. நமக்கும் பொறுப்புணர்வு மிகவும் அவசியம்.
* செம்பைத் தேய்த்து கழுவினால் மறுநாளும் அழுக்காகும். மறுபடியும் தேய்க்க வேண்டும் அதுபோல், நம் மனதையும் தினசரி செய்யும் பூஜைகளால் சுத்தம் செய்ய வேண்டும்.
* நம் துக்கங்கள் அனைத்தையும் அறிவாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும், அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement