இறை நம்பிக்கையின் அவசியம்
டிசம்பர் 23,2011,
08:12  IST
எழுத்தின் அளவு:

* எந்த அளவு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும்.
* இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்துவிட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நமக்கு அளிப்பான்.
* பத்து வகை புண்ணியத்தை செய்வதை விட, ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி உண்மையிலேயே திருந்துவது உயர்ந்தது.
* ஒருவருக்கு தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கை ஒரு போதும் வெற்றியை தருவதில்லை.
* எதைக் கொடுத்தாலும், யாருக்கு கொடுத்தாலும், அதை இறைவனுக்கு கொடுக்கும் உணர்வு இருக்க வேண்டும்.
* கருணையும், இனிமையும் தெய்வத்தின் சுபாவம். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தெய்வநிலைக்கு உயர்வான்.
- அரவிந்தர்

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement