பயப்படுவது கடும் குற்றம்
அக்டோபர் 03,2008,
10:21  IST
எழுத்தின் அளவு:

யாராவது ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டால் அவருடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகியே நில்லுங்கள். எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் கோபக்காரரின் வேகம் தணிந்து விடும். தவறு என்பது அறியாமல் செய்யும் பிழையாகும். ஆனால், தவறினால் உண்டாகும் பாடத்தை உணர்ந்து திருத்திக் கொள்வது சரியான வழிமுறையாகும். மிகவும் கடுமையான உடல் வேதனையைக் கூட, அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து விடும். அதைத் தாங்கக் கூடிய சக்தி உடலுக்கு கிடைத்து விடும். பயம் என்பது ஒரு பெரும் குற்றமாகும். இந்த உலகத்தில் கடவுளின் செயலை நிறைவேற விடாமல், அதை அழிக்கக் கூடிய கடவுள் விரோத சக்திகளில் ஒன்றாக பயம் இருக்கிறது. அதனால் பயத்தை அறவே விட்டொழியுங்கள். "என்னுடைய அறிவு தான் மிகமிக உயர்ந்தது. மற்ற எல்லாரையும் விட நான் எல்லா வகையிலும் சிறந்தவன். ஆகவே, மற்றவர்கள் சொல்வது யாவும் தவறானவை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.கடவுள் உணர்வு ஒன்று தான் மனிதர்களுக்குக் கிடைக்கும் உண்மையான உதவியாகும். அதில் தான் நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும். கடவுளிடமிருந்தே நமக்கு எல்லா வல்லமையும் உண்டாகிறது.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement