இன்ப துன்பத்துக்கு நாமே காரணம்
அக்டோபர் 03,2008,
10:33  IST
எழுத்தின் அளவு:

கடவுளுக்கு மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என்ற பாகுபாடு கிடையாது. மனிதர்கள்தான் தங்களது சுய உணர்வினால் வேற்றுமையையும், சமுதாயத்திற்குள் பிளவையும் ஏற்படுத்துகின்றனர். நாம் வாழும் உலகம் ஒன்றோடொன்று இணைந்து தான் இருக்கிறது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் தான் வேற்றுமை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.மரம், செடி, கொடிகளிடம் உயிர்த்துடிப்பாய் திகழும் பிராண சக்தி தான் மனிதர்களுக்குள்ளே உயிராக இயங்குகிறது. விலங்குகளிடம் கர்ஜனையாகவும், பறவைகளிடம் இசையாகவும் வெளிப்படும் ஆற்றல் தான் மனிதர்களிடத்தில் பேச்சாக பரிணமிக்கிறது. மொத்தத்தில் கடவுள், இயற்கையாக கொடுத்த சக்தியையே உயிர்கள் தங்களுக்கேற்ப பயன்படுத்தி உயிர் வாழ்கின்றன.
உலகில் எங்காவது ஒரு மூலையில் நற்செயல்கள் நடைபெற்றால், அதன் அதிர்வுகள் பிற பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. தவறான செயல் நடந்தால் அதற்கேற்றபடி எதிர்மறையான அதிர்வுகள் பிரதிபலிக்கிறது. ஆக உலகில் நிகழும் இன்ப, துன்பங்கள் நாம் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து தான் அமைகிறது.இன்றைய சூழலில் நாட்டில் சுயநலமும், தீய செயல்கள் செய்யும் எண்ணமும் பெருகி விட்டது. போட்டி, பொறாமை நிறைந்ததாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் எந்த பயனும் உண்டாகப் போவதில்லை என்பதை உணர்ந்து அனைவரும் திருந்த வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயத்தை காண முடியும்.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement