நன்றி சொல்வோம் இறைவனுக்கு!
டிசம்பர் 31,2011,
12:12  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கிறார். கடவுள் அருளையும் மேன்மையையும் அளிப்பார்.
* கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
* கடவுளே! என் இளமை முதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.
* ஒருவர் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; அனைவரிடமும் பொறுமையாயிருங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் உங்கள் எவருக்கும் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement