புண்ணியமே சிறந்த பாதுகாப்பு
டிசம்பர் 31,2011,
12:12  IST
எழுத்தின் அளவு:

* கற்களில் செதுக்கப்பட்ட சிலைகளில் கடவுளைக் காண வேண்டும். கடவுளைக் கல்லாக்க முயலக்கூடாது.
* சூரியனை பார்க்க விளக்கை எடுத்துச் செல்வதில்லை. அதன் ஒளியிலேயே சூரியனை பார்க்கிறோம். அதுபோல,
கடவுளைக் காண பிற சாதனங்களைவிட அருள் தான் தேவை.
* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது. நெஞ்சிலிருந்து வரவேண்டும். அதுவும் தனக்காகச் செய்யப்படாமல், பிறருக்காகச் செய்யப்பட வேண்டும்.
* கண்பார்வையும், கண்களும் சுற்றியுள்ள பொருளை பார்ப்பதற்காக மட்டுமல்ல. இறைவனைக் காண்பதற்கே கொடுக்கப்பட்டுள்ளன.
* மேகம் கலையும் வரை காத்திருந்தால் தான், சூரிய ஒளியைக் காணமுடியும், அதுபோல் அறியாமை அகலும் வரை பொறுமையாக பிரார்த்தனை செய்தால் தான் இறையருள் கிட்டும்.
* ஒருவர் சேர்த்த செல்வம் வறுமைக் காலத்தில் பாதுகாப்பு தரும். நாம் செய்த புண்ணியம் துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
- சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement