நல்லதை எண்ண வேண்டும்
நவம்பர் 04,2012,
12:11  IST
எழுத்தின் அளவு:

* எண்ணங்களுக்கேற்பவே ஒருவரது செயல்கள் அமைகிறது. எண்ணமே நல்ல, தீய செயல்களை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கிறது. நீர்ப்பரப்பில் ஒரு கல்லைப் போடுகிறீர்கள். கல் விழும் இடத்தில் அலைகள் தோன்றி, அப்படியே பரவி கரை வரையில் பெரிதாகி பின் மறைகிறது. அதைப்போலவே எண்ணத்தில் கல் போல விழும் தீய சிந்தனையே, அலை போல உடல் முழுதும் பரவுகிறது. அந்த எண்ணம் கண்களை அடையும்போது, தீயவற்றை பார்க்கிறது. கைகளை அடையும்போது தீய செயல்களை செய்கிறது. கால்களை அடையும்போது செல்லக் கூடாத இடங்களுக்கு செல்ல வைக்கிறது. அதுவே நல்ல எண்ணமாக இருந்தால் செயல்களும் நல்லதாகவே இருக்கும். ஆகவே, மனதில் நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* வெப்பம், குளிர்ச்சி இவ்விரண்டும் இயற்கையின் மாறுதல்களுக்கேற்ப சுழற்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கோடை காலத்தில் வெப்பத்தை வெறுத்து, குளிர்ச்சியை விரும்புகிறோம். குளிர்காலத்தில் குளிர்ச்சியை ஒதுக்கி, வெப்பத்தை தேடிச்செல்கிறோம். ஒரு சமயத்தில் நாம் விரும்பும் சூழலை, மற்றொரு நேரத்தில் வெறுக்கவும், விரும்பவும் செய்கிறோம். வெறுப்பதாலோ, விரும்புவதாலோ இவ்விரண்டிலிருந்தும் நாம் ஒதுங்கிவிட முடியாது. அதைப்போலவே இன்பமும், துன்பமும் வாழ்க்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இவை இரண்டையும் வேறுவேறாக பார்க்காமல் சமமாக பாவித்து ஏற்றுக்கொள்ளுங்கள்


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement