உன்னை முதலில் நம்பு!
ஜனவரி 10,2012,
11:01  IST
எழுத்தின் அளவு:

* சூரியன் வானத்தில் இருந்தாலும் அதன் கதிர்கள் பூமிக்கு வெளிச்சத்தை தருகிறது. அதுபோல், நீ எங்கிருந்தாலும் உன் கடமையை செய்து கொண்டிரு.
* அன்பு என்ற பண்பு பெருகினால் சண்டைகளும், பிறர் உரிமையைப் பறித்தலும், பிறரைச் சுரண்டி வாழ்தலும் மறைந்துவிடும்.
* உலகம் முழுவதும் இறைவனின் வடிவமாக உள்ளது. அணுக்கள் உட்பட அனைத்துப் பொருள்களிலும் இறைத்தன்மை இருக்கிறது. எல்லாவற்றையும் இறைவனாகப் பாருங்கள்.
* அச்சத்தை நம் உள்ளத்திலிருந்து அகற்ற, அன்புணர்வு நம் மனதில் நிலையாக இருக்க வேண்டும்.
* ஒரு செயலைத் துவங்கும் போது, அதை செய்து முடித்து விடலாம் என உன்னை நீயே நம்ப வேண்டும். இவ்வாறு நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால் காலப்போக்கில் வெளியுதவிகளும் கிடைக்க ஆரம்பித்து விடும்.
* தன்னைத் தானே ஆளவேண்டும், தன்னைத்தானே காக்க வேண்டும், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement