Advertisement
அச்சமின்றி வாழ்க வளமுடன்!
ஜனவரி 17,2012,
09:01  IST

* மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால் அதனை அறிய முயன்றால் அடங்கிவிடும்.
* உறுதியும், ஒழுங்கும் இருந்தால் எண்ணியது நிறைவேறும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.
* அறியாமையால் மனிதன் கவலைக்கு உள்ளாகிறான். திறமையின்மை, அச்சம் ஆகிய இரண்டும் கவலை என்னும் நோயை ஏற்படுத்துகின்றன. செய்யும் செயலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் கவலைக்கு வழியே இல்லை.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவுமில்லை. வழிமுறை அறியாமலே பலரும் வாழ்வில் அவதிப்படுகின்றனர். திறக்க முடியாத பூட்டு ஒன்று உலகில் கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர் தான் உண்டு.
* எல்லோரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று, "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது உயர்ந்த பலனைத் தரும். இதனால் பகைவரைக் கூட நல்ல நண்பர்களாக மாற்றி விட முடியும்.
- வேதாத்ரி மகரிஷி

வேதாத்ரி மகரிஷி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement