நதிகள் நமது தெய்வம்
ஜனவரி 17,2012,
09:01  IST
எழுத்தின் அளவு:

* அனைவரிடத்திலும் இறைவனைப் பாருங்கள், நேசியுங்கள், அதுவே இறைவனுக்குப் பிடித்த பக்தி மார்க்கம்.
* தாயை அன்புடனும், மரியாதையுடனும் நடத்துங்கள். தாயைப் போலவே தாய்நாடும் உங்களை ஈன்றெடுத்தது.
* பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் நமக்குள்ளேயே இருப்பதால் வெளியில் தேட வேண்டாம். இவ்வாறு ஆன்மிக உணர்வைப் பெற்றால் மனிதன் அபூர்வ சக்தி பெறுகிறான்.
* நதிகள் அனைத்தும் நமக்குத் தெய்வம் போன்றவை. அவற்றின் பலனைத் தேசத்தில் உள்ள அனைவரும் பெற அவற்றைப் பொதுச் சொத்தாக மதிக்க வேண்டும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் நல்லவையாக நன்கு இணைந்திருக்கும்படி வாழ்க்கை நடத்துவது தான் மனித குலத்துக்கு மதிப்பு தரும்.
* நாம் அன்புடன் செய்யும் சேவை தூய்மையானதாக இருக்க வேண்டும். அளவில் அதிகமாக இருப்பதைக் காட்டிலும் தன்மையில் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
* மனிதப்பிறவியைப் பெறுவது மிகவும் அரிது. அதைப் பெற்றவர்கள் அதன் முழுப் பயனையும் பெற அன்புள்ளம் கொள்ள வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement