யாரையும் நிந்திக்கக் கூடாது
ஜனவரி 17,2012,
09:01  IST
எழுத்தின் அளவு:

* மற்றவரை ஒருவர் நிந்திக்கும்போது அது வானத்திற்கு செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு, அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது வலபுறம் இடபுறமும் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது.
* ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தாலோ, வீண்பழி சுமத்தினாலோ விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ அவரையே சாரும்.
* ஒரு வியாபாரத்தில் பங்குதாரர்கள் இருவர் எதுவரை ஒருவரை ஒருவர் மோசம் செய்யாமல் இருப்பார்களோ, அதுவரை நான் அவர்களுடனேயே இருக்கின்றேன். ஆனால், அவர்களை விட்டும் நான் நீங்கி விடுகிறேன். அங்கே ஷைத்தான் குடியேறி விடுகின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
* மவுனம் கொள்வீராக! அதனால் ஷைத்தான் உம்மை விட்டு விலகி விட்டான்.
* மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement