புத்திசாலி பட்டம் வேண்டுமா!
ஜனவரி 19,2012,
10:01  IST
எழுத்தின் அளவு:

* புத்தி இல்லாதவர்களே மனதைக்கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ளுங்கள். புத்திசாலி என்ற பட்டத்தைப் பெறுங்கள்.
* நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு நியாயமாகத் தோன்றாது. அதனால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொது நியாயத்தை அனுசரிப்பது தான் நல்லது.
* பணமும், பதவியும் இருக்கும் போது ஏற்படும் சுகத்தைவிட, அதைப் பாதுகாக்க வேண்டும், பதவி போய்விடக்கூடாது என்ற கவலை தான் அதிகமாக இருக்கிறது.
* உலகில் இருப்பவர்கள் தாங்களே மகாபுத்திசாலி, ஒழுக்கமுள்ளவன் என்றும், தன்னைப் போல கஷ்டப்படுபவர்கள் வேறு யாருமில்லை என்றும் எண்ணுகின்றனர். எல்லாருக்கும் சுகதுக்கம் இருக்கிறது என்பதை உணருங்கள்.
* நம் கோபம் எதிராளியை மாற்றாது. மாறாக எதிர்ப்பை வளர்க்கத் தான் செய்யும். எனவே, கோபத்தை அறவே விடுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement