நிம்மதியாக இருக்க எளிய வழி
ஜனவரி 19,2012,
10:01  IST
எழுத்தின் அளவு:

* இறைவனிடம், மனதார பிரார்த்தனை செய்பவர்களின் மனம், படிப்படியாக அமைதி அடையும்.
* குடும்பத்துக்குரிய பணியை, இறைவனே அளித்ததாகக் கருதி சரிவர செய்ய வேண்டும். அதில் வேதனையும், துன்பமும் வந்தாலும் இறைவன் வழிகாட்டுவார்.
* பிரார்த்தனை செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதுடன், நிம்மதியாகவும் இருப்பார்கள்.
* கங்கையில் அசுத்தம் மிதந்தாலும் தூய்மை குறையாதது போல், நல்லவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மதிப்பை குறைத்து விடாது.
* எதைப்பற்றியாவது தெரிந்து கொள்ள விருப்பம் எழுந்தால், தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து, கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்யுங்கள். இறைவன் அதற்கு விடை தருவார்.
* இறைவன் நம் எல்லாருக்கும் சொந்தமானவர், அவரைத் தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.
- சாரதாதேவியார்

Advertisement
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement