நல்லவர்களுடன் நட்பு வையுங்கள்
அக்டோபர் 03,2008,
11:27  IST
எழுத்தின் அளவு:

 பக்தி மார்க்கத்திற்கு ஏற்ற வழியை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்கனவே அந்த மார்க்கத்தில் உள்ள ஒருவரை குருநாதராக ஏற்றுக் கொள்ளவேண்டும். அந்த மார்க்கத்தைச் சரியான முறையில் கடைபிடிக்க கீதை, சாஸ்திரம், வேதம், உபநிடதம் முதலியவற்றையும், அதில் உள்ளவற்றையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.* பண்பாளர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். அவர்களுடன் சேர்ந்து பக்தி மார்க்கத்தில் செல்ல வேண்டும். தங்களுக்குள் நல்ல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.* பக்தி மார்க்கத்தில் வெற்றி கிடைக்கும் வரையில் முயற்சிகளை மட்டும் கைவிடக் கூடாது. இடையில் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் கலங்கிவிடக் கூடாது. அத்தகைய சூழ்நிலையில் குருநாதரின் அறிவுரையைக் கேட்டு, அதன் வழி நடக்க வேண்டும்.* புகை பிடிக்கும் ஒருவன், பத்து புகைபிடிக்காத நண்பர்களுடன் சேர்ந்தால், அந்தப் பழக்கத்தை விரைவிலேயே விட்டு விடுவான். அதுவே புகை பிடிக்காத ஒருவன், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பத்து நண்பர்களுடன் சேர்ந்தால், அந்த பழக்கத்தை மிக விரைவில் பிடித்து கொண்டு விடுவான். ஆக அதிகமான நபர்களால் கையாளப்படும் பழக்கம், குறைந்த எண்ணிக்கையுடையவனிடம் எளிதாக சென்று விடுகிறது. ஆகவே, மோசமான நண்பர்களிடம் சேர்வதைவிட நல்ல நண்பர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement