அமைதி கொடு இறைவா!
ஜனவரி 23,2012,
09:01  IST
எழுத்தின் அளவு:

* உடலை அளித்த தாயையும், உணவை அளித்த தந்தையையும், அறிவை அளித்த ஆசிரியரையும் ஒரு போதும் மறக்கக் கூடாது.
* ஐம்புலன்களும் வேலை செய்யும் வரை தான் வாழ்க்கை நீளும். அவை அடங்கிவிட்டால், உடலுக்குரிய மதிப்பு குறைந்துவிடும்.
* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, உதவி இவற்றினால் நம்முடைய மனதுக்குக் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* கடமையைக் கருத்துடன் செய்வதே மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் அருள்வது இறைவனின் வேலை.
* அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தப் பழகிக்கொள்ளுங்கள். இறைவன் உங்களிடம் எதிர்பார்க்கும் பக்தியின் அடிப்படை இதுதான்.
* நம்முடைய மனத்தைப் பக்குவப்படுத்தி நல்ல பண்புகளை ஏற்படுத்துவதற்காகத் தான் நம் வாழ்வில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கிறார்.
* கடவுளிடம் ""மன அமைதியைக் கொடு'' என்று வேண்டிக்கொண்டால் போதும், அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement