எண்ணியது நிறைவேறட்டும்!
ஜனவரி 30,2012,
14:01  IST
எழுத்தின் அளவு:

* உலகம் எங்கும் பரவியிருக்கும் அம்பிகையே! உன் கருணை வெள்ளத்தில் எங்கள் தேவையற்ற ஆசைகள் அடித்து செல்லப்படட்டும். எண்ணிய செயல்கள் நிறைவேற உன் அருள் கிடைக்கட்டும்.
* அம்மா! உன் உள்ளம் குளிரட்டும். எங்கள் ஆணவம் நீங்கட்டும். நெஞ்சில் உள்ள தவறுகள் ஒழியட்டும். உன் மீது கொண்ட பக்தியால் எங்கள் கண்ணில் கண்ணீர் பெருகட்டும்.
* தாயே! எந்தப் பொருளிலும் உள்நின்று இயங்குபவளே! மனதில் எழும் மோக எண்ணங்களை கொன்றுவிடு. யோகப் பயிற்சியில் என்னை லயிக்கச் செய்.
* ஆசையில்லாத தூய மனதை எனக்கு கொடு. நாள்தோறும் புதிதாய்ப் பிறந்தது போல, ஒளிச்சுடர் போல பிரகாசிக்கும் உயிரை வழங்கு.
* அம்மா! என் உடலைத் தீ சுடுவது போல துன்பங்கள் வருத்தினாலும், உன்னைப் பாடும் நல்வரத்தைக் எனக்கு கொடு.
* அம்மா! சிவக்தியே! விசையினால் இயங்கும் பந்து போல், விரைந்து இயங்கும் உள்ளத்தையும், விரும்பியபடி இயங்கும் உடல் வலிமையையும் எனக்கு தருவாய்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement