எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்
டிசம்பர் 03,2007,
19:18  IST
எழுத்தின் அளவு:

* உங்கள் அந்தராத்மாவை கண்டுபிடிப்பது அவசியம். அதன்மூலம் இவ்வுலகில் தெய்வீக வாழ்க்கையை நிலைநாட்டமுடியும். சுகபோகம், திருப்தி, சிற்றின்பம் இவற்றை விலக்குங்கள். கொளுந்துவிட்டு எரியும் நெருப்பாக இருங்கள். ஏற்படுகிற யாவும் நமது முன்னேற்றத்திற்கு உதவுவதற்காகவே என்று எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கட்டும்.


* மனக்கிளர்ச்சி, பரபரப்பு, கலகம் இவற்றை தவிர்த்துவிடுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் பூரண அமைதியுடன் இருங்கள். அடுத்தவர்களிடம் காணப்படும் குறைகளை மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருந்தாலன்றி யாரையும் குறை சொல்லாதீர்கள்.


* நீங்கள் முன்வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்ணும் உணவு மகத்தான காரியங்களை செய்வதற்கு தேவையான சக்தியை உங்களுக்கு அளிப்பதாக இருக்க வேண்டும்.


* சொற்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மிக இன்றியமையாதவைகளை மட்டுமே பேசவேண்டும். உள்ள உறுதி உங்கள் ஜீவனின் இயக்கங்களை முற்றிலும் ஆட்கொள்ளட்டும்.


* நீங்கள் என்றென்றும் இருந்திருக்கிறீர்கள். என்றென்றும் இருப்பீர்கள். வெளி உருவங்கள் அழியும். அவ்வுருவங்கள் உங்கள் உண்மையான ஜீவனுக்கு வெறும் உடைகள் போன்றவையே. உங்கள் வாழ்விற்கு நீங்களே தலைவர். உறுதியுடனும், பெருமிதத்துடனும் உங்கள் பாதையில் நடைபோடுங்கள்.


* அகந்தையை விடுங்கள். பாரத அன்னையின் தகுதிவாய்ந்த குழந்தையாக இருங்கள். இறைவனின் அருளில் அசையாத நம்பிக்கை வையுங்கள். எப்போதும் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் உடையவராக இருங்கள்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement