இனிமையான சொர்க்கம்
பிப்ரவரி 10,2012,
08:02  IST
எழுத்தின் அளவு:

* மனித இதயத்தின் ஆழப் பகுதியிலும், அணுவிற்குள்ளும் ஆதி அந்தம் இல்லா இறைவன் தன்னை ஒளித்துக் கொண்டிருக்கிறான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன்.
* வாழ்வில் ஏற்படும் தவறுகளை பெறும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்.
* கருணை என்பது இனிமையான சொர்க்கம். நாம் அனைவரும் வாழ்வில் கருணை நிறைந்தவர்களாக மாறினால், இங்கேயே சொர்க்க வாழ்வை அனுபவிக்கலாம்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதைத் தட்டி எழுப்புங்கள். நன்மை செய்யும் மனநிலையைப் பெறுங்கள்.
* வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும், அது இறைவழிபாட்டுக்கு சமமானதாக இருக்கட்டும்.
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம். உறுதியுடன் எதையும் செய்யுங்கள். வெற்றிக்கனி உங்களுக்கே.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement