அன்பு வடிவில் அம்பிகை
பிப்ரவரி 10,2012,
08:02  IST
எழுத்தின் அளவு:

* பக்தியும், சாந்தமும் தான் உலகிலுள்ள பிரச்னைக்கு உற்ற மருந்து. உண்மையான பக்தியும், சாந்தமும் பரவப் பரவப் பிரச்னைகளும் குறைந்து விடும்.
* உருவமில்லாத இறைவனை, உருவத்தோடு பார்க்க, தெவிட்டாத ஒரு முகம் வேண்டும். அனைவருக்கும் நல்லது செய்யும் அம்பாளுடைய கருணை முகம் இதற்கு உதாரணம்.
* கருணையே உருவான இறைவனிடம், நம் இதயத்திலும் கருணையை உண்டாக்குமாறு பிரார்த்திப்போம்.
* பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்துவிட்டால், இறைவன், அம்பிகை உருவில் நம்முடைய உள்ளத்தில் காட்சியளிப்பார்.
* சஞ்சலமாகிய சேற்றில் வழுக்கி விழுந்தால், கரையில் இருக்கும் கெட்டியான பொருளைப் பிடித்து கரையேற முடியும். அந்தக் கெட்டியான பொருளே ஈஸ்வரன்.
* அனைத்து சமயக் கட்டுப்பாடுகளும் நாம் பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் இருக்கவும், நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்றவும் உருவாக்கப்பட்டவையே.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement