பணம் மட்டுமே வாழ்வல்ல!
அக்டோபர் 16,2008,
16:46  IST
எழுத்தின் அளவு:

பகுத்தறிவு இல்லாததால், மிருகங்கள் தாங்கள் உயிர் வாழ்வதையே உணராமல் வாழ்கின்றன. ஆனால், பகுத்தறிவு இருந்தும், வாழ்க்கை இன்னதென்று அறியாமல் வாழும் மனிதர்கள் மிருகத்தையும் விட தாழ்ந்தவர்கள் ஆவார்கள். அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன் நம் குறைகளைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை.
மனிதனுக்கு மனதில் காமம்(ஆசை), குரோதம் (வெறுப்பு), லோபம்(கஞ்சத்தனம்), மோகம்(இச்சை), மதம்(தான் என்னும் செருக்கு), மாச்சர்யம்(சகிப்பின்மை) என்னும் ஆறுபகைவர்கள் உள்ளனர். இவர்களில் யார் ஒருவர் உள்ளே நுழைந்தாலும் மனம் பாழ்படுகிறது. செலவழிக்கும் பணம் மட்டும் நம்மை விட்டுச் செல்வதில்லை. நாம் பூமியில் வாழும் நாட்களும் நம்மை கேட்காமலேயே சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், செல்வம் ஈட்டுவதில் நாம் காட்டும் அக்கறையை, வாழ்நாளைச் செலவழிப்பதில் காட்டுவதில்லை.
தொண்டு செய்வதில் இருக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆனால், சேவை செய்வது கடினம் என்றே நாம் நினைக்கிறோம். சேவைமனப் பான்மை கொண்டவர்கள் செயல்களைக் கண்டு மலைப்பதில்லை.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement