லட்சியம் நிறைவேற வழி
பிப்ரவரி 21,2012,
10:02  IST
எழுத்தின் அளவு:

* விழிப்புடன் இருந்தால் காலம் விரயமாகாது. ஆண்டுக்கணக்கில் செய்யும் பணியைக் கூட நாள் கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் லட்சியத்தை விரைவில் நிறைவேற்றுவான்.
* உன்னிடம் உள்ள பக்தி மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான ஒரே உதவி. அது ஒன்று தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.
* எந்த விஷயமாக இருந்தாலும், அதை அமைதியான முறையில் எடுத்துக்கூறுவதே வலிமைக்கு அடையாளமாகும்.
* பக்தி என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையை நம்முடைய உள்ளத்தில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். இறைவன் மீது முழு நம்பிக்கை வைக்கும் போது திடமான, உறுதி வாய்ந்த துணிவைப் பெறுகிறோம்.
* மலர்கள் இறைவன் வழங்கிய பரிசும், ஆசீர்வதிப்பும்ஆகும். ஆகாயத்தின் மேன்மைத் தன்மை, பூமியில் மலர்களாலேயே அளிக்கப்படுகிறது.
* இறைவனுக்குத் தொண்டு செய்யுங்கள், இதைவிட சிறந்த மகிழ்ச்சி மனிதனுக்கு வேறு இல்லை
- ஸ்ரீ அன்னை
( பிப்., 21, ஸ்ரீ அன்னை பிறந்த தினம்)


Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement