இறைவனிடம் ஒப்படையுங்கள்
பிப்ரவரி 21,2012,
10:02  IST
எழுத்தின் அளவு:

* ஆணவத்தை கைவிடுங்கள். எல்லாமே இறைவன் தந்தது என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் அவனை நெருங்குவது சுலபம்.
* கடுமையான வேலைகளில் ஈடுபடும் போது மனம் வேறு எதையும் நினைக்காது. அந்த வேலை இறைவனுக்காகவும், பக்தர்களுக்காகவும் என்று அமைந்தால் இன்னும் உயர்ந்ததாகிவிடும்.
* எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் சத்திய சோதனையை கடைபிடியுங்கள், வாழ்க்கையில் அமைதியும், சவுபாக்கியமும் வந்தடையும்.
* சுகம் வந்தால் இறைவனை மறந்தும், துக்கம் வந்தால் மட்டும் தன்னைச் சிந்தித்துப் பார்ப்பது பற்றியும் இறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். இன்பம் துன்பம் எதுவந்தாலும் அதை இறைவனுக்கு என்று அர்ப்பணியுங்கள்.
* கஷ்டகாலத்தில் கடவுள் வரவில்லையே என்ற கவலை வேண்டாம் பக்தர்களுக்கு அருள வேண்டிய சந்தர்ப்பமும் நேரமும் வரும்போது அவன் தானாகவே வெளிப்படுவான்.
* நம்முடைய வாழ்க்கையில் பகவான் லீலை புரிவதும் நமக்குப் புரியக் கூடிய மனித வடிவத்திலேயே அமைகிறது.
- சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement