மன அமைதிக்கு நல்ல வழி
பிப்ரவரி 21,2012,
11:02  IST
எழுத்தின் அளவு:

* அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள் தாமே நல்லுரைகளை ஏற்கிறார்கள்.
* உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் (பூமியில்) பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கின்றீர்கள் என்பதும் இறைவனின் சான்றுகளில் ஒன்றாகும்.
* அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதால் உள்ளங்கள் அமைதி அடைகின்றன.
* இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றொருவர்க்கு சகோதரர் ஆவார். உங்கள் சகோதரர்களுக்கு இடையில் தொடர்புகளை சீர்படுத்துங்கள்.
* இஸ்லாம் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிதல், அமைதி என்று பொருள். இறைவனுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும் என்பதே அதன் கருத்து.
* எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் அதிபதி ஆகிய இறைவனுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும், இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement