அமைதி தரும் ஆனந்தம்
பிப்ரவரி 29,2012,
13:02  IST
எழுத்தின் அளவு:

* ஆன்மிகம், தெய்வீகம், சத்தியம், புனிதம், அமைதி ஆகியவை நிறைந்த நாடே, உலகில் மிகவும் பெருமை வாய்ந்ததாகும்.
* கங்கை நதியின் ஒவ்வொரு நீர்த்துளியிலும் அன்பு பிரதிபலிக்கிறது. சகிப்புத்தன்மை இந்த மண்ணின் இயற்கை குணம். உலகில் வேறு எங்கும் காணமுடியாத தெய்வீகச்சிறப்பு இது.
* கடவுள் சூரியனைப் போன்றவர். அகங்காரம் என்ற மேகம், நம் இதய தாமரையை மறைக்காத போது, அவரது கிரணங்கள் அதன் மீது விழுந்து அதை மலரச் செய்கிறது.
* நாவில் சர்க்கரை இருக்கும் வரை இனிப்பும் இருக்கும். இதயத்தில் அன்பு, அமைதி, பக்தி இருக்குமானால் ஆனந்தம் தொடரும்.
* கருணை நிரம்பிய இதயம், உண்மையை பூஜிக்கும் சொல், பிறருக்கு சேவை செய்யும் உடலை பெற்றவர்கள், இவ்வுலகில் எங்கு சென்றாலும், அவர்களை எந்த தீயசக்தியாலும் எதுவும் செய்துவிட முடியாது.
* மனம்கவரும் இயற்கை எழில் நிறைந்த புனிதமான பாரத மண்ணில் பிறந்தவர்கள், நாட்டின் உயர்வு, வளமைக்கு பாடுபட வேண்டியது கடமை.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement