இறைவன் நெருக்கமானவன்
பிப்ரவரி 29,2012,
13:02  IST
எழுத்தின் அளவு:

* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக் கூட நாம்
அறிகின்றோம். அவனது பிடரி நரம்பை விடவும் அதிமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.
* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே, எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.
* எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
* நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக் கடுமையானதாகும்.
* உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
* திண்ணமாக தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை இறைவன் நேசிக்கின்றான்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement