ஜெபம் கேட்கப்படவில்லையா
பிப்ரவரி 29,2012,
13:02  IST
எழுத்தின் அளவு:

* இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்தார். மனுக்குலத்தின் இரட்சிப்பின் திட்டத்தை தம்முடைய மரணத்தினாலே நிறைவேற்ற வந்தவர்,""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்,'' என்று ஜெபித்தார். அந்த ஜெபம் கேட்கப்படவில்லை. ஆகவே, ""உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,'' என்று தம்மை ஒப்புவித்தார்.
* ஆனாலும், இரண்டாம் முறையும் அப்படியே ஜெபித்தார். அப்போதும் கேட்கப்படவில்லை. மீண்டும் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். மூன்றாம் தரமும் அப்படியே ஜெபித்தார். பதிலில்லை. முற்றுமாக, பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
* அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். இரட்சிப்பின்
திட்டத்தை செய்து முடித்தார்.
* ""நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவிமடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்'' (யோவா 5:14) என்கிறது பைபிள்.
- தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement