ஆன்மிக முன்னேற்றத்திற்கு...
பிப்ரவரி 29,2012,
13:02  IST
எழுத்தின் அளவு:

* பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள், அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயம் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.
* ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்.
* விதியை உயரிய எண்ணங்களாலும், நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் மாற்றியமைக்க முடியும்.
* மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. தூய தன்மையை அனைவரும் கடைபிடித்தால் வாழ்க்கையில் உயரலாம்.
* ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும்.
* உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.
- சிவானந்தர்

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement