நற்பண்பைக் கடைபிடிப்போம்
மார்ச் 05,2012,
13:03  IST
எழுத்தின் அளவு:

* ஆசைகளை இறைவனிடம் அர்ப்பணித்துவிட்டு, மனதை சமநிலையில் வைக்க அமைதி தரும் பழக்கத்தை கொள்ளுங்கள். திட்டுபவர்களை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
* நீராடல், நல்ல உடை, தூய உணவு, தூய சூழ்நிலை ஆகியவை புறத்தூய்மையை அளிக்கும். சுயநலம் இல்லாத சேவை உள்ளத் தூய்மையை அளிக்கும்.
* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, ஜீவன்களிடம் காட்டும் கருணை இவற்றால் நம்முடைய மனதுக்கு கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* மனிதன் தன்னைத் தெய்வ வடிவமாக உணர வேண்டும். மனித வடிவம் என எண்ணி மயங்கக் கூடாது.
* வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை முதலில் ஆலோசிக்க வேண்டும். புனிதமான மனித வாழ்க்கையில் தூய்மையற்ற செயல்களை செய்து, வாழ்நாளை வீணாக்கக் கூடாது.
* இறைவன் நம்மிடம் இருக்கிறார் என்பதால், நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை மிக முக்கியம்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement