உங்களின் சிறந்த ஆசான்
மார்ச் 08,2012,
15:03  IST
எழுத்தின் அளவு:

* கடவுளிடம் அனைத்து இயல்புகளும் இருக்கின்றன. ஆனால், மனித இயல்பு மூலமாகத்தான் நாம் அவரைக் காண இயலும்.
* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்து எழுந்திருக்கச் செய்யுங்கள்.
* ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடன் இருப்பது தெய்வவழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
* ஒருவனுடைய பண்பை உருவாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டுமே சரிசமமான பங்கைப் பெறுகின்றன. அதிலும் இன்பத்தைவிட துன்பமே சிறந்த ஆசானாக அமைகிறது.
* வாழ்க்கையில் தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement