நல்ல மனம் வேண்டும்!
நவம்பர் 22,2008,
09:52  IST
எழுத்தின் அளவு:

* ஒரு விஞ்ஞானி, இன்னொரு விஞ்ஞானியைப் போலவே காப்பியடித்து சிறுமாற்றம் செய்துவிட்டு மார்தட்டுவதில் பயனில்லை. தனித்துவ மாக வித்தியாசமான ஒரு கண்டுபிடிப்பைக் கொடுத்தால்தான் உலகம் பாராட்டும். பிறரைப் பார்த்து நாமும் அதேபோல் செய்ய முற்படுவது, நமக்கென்று ஒரு தனித்துவத்தை ஒருநாளும் தராது. அது நம்மை தவறான பாதைக்குத்தான் அழைத்துச்செல்லும்.


* பிறரைப்பார்த்து செய்யும் செயல் வேண்டுமானால் இலகுவாக இருக்கலாம். ஆனால், சுயசிந்தனையும், கட்டுப்பாடும், நேர்மையும் குலைந்துபோகும். பிறர் நம்மை கைதூக்கி விடுவதைவிட, நம்மைநாமே உயர்த்திக் கொள்வது எவ்வளவோ மேலானது. உன்னால் முடிந்த மட்டும் சாதனை செய். அதில் வெட்கித் தலைகுனிய எதுவுமே இல்லை.


* நம் நாட்டில் பல மகான்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நாம் முன்னேற நினைக்கலாம். அதில் தவறு இல்லை. ஏனெனில் அவர்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் அமைத்துக்கொடுத்த கட்டுப்பாடுகள் நம்மை மென்மேலும் உயர்த்தும். அவர்களுடைய நல்ல பண்புகளையும், ஆற்றலையும் பின்பற்றலாம். நல்ல மனமும், பண்புகளும் இருந்தால் நிச்சயம் வளர்ச்சி பெறுவோம்.


-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement