சத்திய சோதனையே வாழ்க்கை
மார்ச் 15,2012,
08:03  IST
எழுத்தின் அளவு:

* சேவை செய்யும் போது "நான் எஜமான்' என்ற எண்ணம் கூடாது, கடவுளுக்கு செய்வதாகக் கருதி செயல்கள் செய்தால் தெய்வ உணர்வுடன் செய்ததாகப் பொருள்படும்.
* முற்றிய தேங்காயை கடவுளுக்கு நைவேத்யமாகப் படைக்கிறோம், அதேபோல் பக்குவமிகுந்த முதிர்ச்சி அடைந்த உள்ளத்தை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
* கடவுள் நம் முன் விஸ்வரூபம் எடுத்து வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி நமக்கு கிடையாது. மனித வடிவில் வரும் போது தான் நாம் அன்பு காட்டி வழிபடுகிறோம்.
* வாழ்க்கையை ஒரு சத்தியசோதனையாக எடுத்துக் கொண்டு, எண்ணம், வாக்கு, செயலில் தூய்மையை கடைபிடித்தால் வாழ்வில் அமைதி உண்டாகும்.
* நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிப்பது, நல்லவர்களுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனதுக்கு வேலை கிடைக்கும். வீணான சிந்தனைகளில் மனம் அலையாது.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement