துன்பத்தை பொறுத்துக் கொள்வோம்
நவம்பர் 25,2008,
09:12  IST
எழுத்தின் அளவு:

* நிஜமான புகழ் எது தெரியுமா? பொருள் இல்லாத ஏழைகளைக் கண்டு இரக்கப்பட்டு செய்யும் உதவிகளின் மூலம் உண்டாகும் புகழ் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் சிறப்பு கொண்டதாகும்.
* செல்வம் இல்லாதவர்கள் இம்மண்ணுலகில் எதையும் பெற முடியாது. அருள் எனப்படும் செல்வம் இல்லாதவர்களால் மேலுலகத்தில் இன்பம் பெற முடியாது.
* தீயில் காய்ச்சி உருக்கிய தங்கம் எப்படி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறதோ அதுபோல, துன்பங்கள் நம்மை வருத்தும் போது அதைப் பொறுத்துக் கொள்பவர்கள் யாரோ அவர்களின் வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.
* தன்னைப் பெற்று ஆளாக்கிய தாயின் பசியைப் போக்குவதாக இருந்தாலும் கூட, ஒருவன் கொடிய செயல்களாகிய கொலை, களவு போன்றவைகளைச் செய்வது கூடாது.
* கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல், பிறரது துன்பத்தைக் கண்டு கொள்ளாமல் செல்பவனின் கண்கள் இரண்டும் முகத்தில் இருக்கும் புண்கள் போன்றதாகும்.

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement