வாழ்க்கை ஒரு நீரோட்டம்
மார்ச் 20,2012,
15:03  IST
எழுத்தின் அளவு:

* தூய்மையற்ற சிந்தனைகளைப் படித்தால், அசுத்தமான எண்ணம் மனக்கண்ணாடி வழியே இதயத்திரையில் படியும். நல்ல திசையில் மனதைத்திருப்பி நல்லதைச் செய்ய வேண்டும்.
* கல்லை, மண்ணை, காகிதத்துண்டைக் கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் கடவுளைக் கல்லாகவும், காகிதத்துண்டாகவும் கீழ் நிலைக்கு இறக்கி விடக்கூடாது.
* இளமை போனால் திரும்பாது. அதுபோல, வாழ்க்கையும் ஒரே திசையில் செல்லும் நீரோட்டம் என்பதால், பயனுள்ள வகையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கடவுள் கொடுத்த பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்பம், துன்பம் எதுவந்தாலும் அது இறைவன் கொடுத்ததாகும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பேச்சும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால், மனிதனின் மனதில் அமைதி தொலைந்துவிடும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement