நம்பிக்கை வையுங்கள்
மார்ச் 20,2012,
15:03  IST
எழுத்தின் அளவு:

* கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.
* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
* கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர்.
* பசும் புல்வெளி மீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.
* அமைதிக்கு வழி வகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
-பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement