இருக்கும் இடமே சொர்க்கம்
டிசம்பர் 06,2008,
09:09  IST
எழுத்தின் அளவு:

* நமது சமய நூல்கள் சொர்க்கம், நரகம் பற்றி விவரிக்கின்றன. இது நம் நம்பிக்கையை பொறுத்ததே. ஆனந்தமயமான ஒருநிலையை சொர்க்கம் என்கிறோம். நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுவது நமது கையில் தான் உள்ளது. இதை விடுத்து, அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை விட வசதியாக இருப்பதாக நாம் கருதுகிறோம். அதனால், நமக்கு சொர்க்க பூமியாகத் தெரிகிறது. ஆனால், அமெரிக்காவில் இருப்பவர்கள் மனஅமைதி இல்லாமல் தவிக்கும் போது நமது மதத்தின் தத்துவ விளக்கங்களை படிக்கிறார்கள். அவற்றில் ஆழ்ந்த அமைதியை உணர்கிறார்கள். அவர்களுக்கு நம் இந்திய நாடு சொர்க்கமாகப் படுகிறது.


* நல்வினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நமது வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்தால், அதற்கு ஈடான புண்ணியத்தை தேடிக்கொள்கிறோம். பாங்கில் பணம் சேர்த்தால் அதை செலவு செய்து நாம் ஆனந்தமாக இருக்கிறோம். அதைப் போலவே இந்தப் புண்ணியத்தை செலவிட்டு சொர்க்கத்தில் ஆனந்தத்தை பெறலாம். புண்ணிய பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறோம். ஆகவே, நமக்கு பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


* நாம் செய்த வினைப்பயனை பொறுத்து நன்மையும் தீமையும் நமக்கு திரும்ப கிடைக்கின்றன. அந்த அனுபவமே சொர்க்கமும், நரகமும் ஆகும். இந்த சுழற்சி இருக்கும் வரையில் கடலில் அலை தோன்றி மறைவதைப்போல, பிறப்பும் இறப்பும் இருந்து கொண்டே இருக்கும். கடவுளை நாம் உணர்ந்து விட்டால் அப்புறம் இந்த அனுபவம் தேவையில்லை. அலை அடங்கிய கடலைப்போல, நாமும் அவருடன் ஒன்றிவிடுகிறோம். அப்புறம் சொர்க்கமோ, நரகமோ, பிறப்போ, இறப்போ நம்மைப் பாதிப்பதில்லை.

Advertisement
தயானந்த சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement